மணிப்பூர் பயங்கரம்.. பள்ளிக்கு வெளியே பெண் சுட்டுப் படுகொலை- இணைய சேவை தடை தொடர்ந்து நீட்டிப்பு!
இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைகளுக்கு இடையே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில் 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கும் அதிகமானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறையானது மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளது. குக்கி இனக்குழுவினர் மட்டுமே வசிக்கும் பகுதியில் சுயாட்சி கவுன்சில் நிர்வாகம் கோரி அடுத்த கட்டமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயுதம் தாங்கிய குக்கி கிராம காவல்படையினரும் இணைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் மணிப்பூரில் பள்ளிக் கூடங்கள் 2 மாதங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. பெரும் அச்சத்துடன் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் இம்பால் மேற்கு பகுதியில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இம்பால் மேற்கு பகுதியில் Shishu Nishtha நிகேதன் பள்ளிக்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்தது.
இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில் அப்பெண் சிக்கியதாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கங்போக்பி மாவட்டத்தில் இரு இனக்குழுவினரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மற்றொரு இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவின் வீரர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது.
இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக அமலில் இருக்கும் இணைய சேவைகளுக்கான தடை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் பரவாமல் தடுக்க ஜூலை 10-ந் தேதி வரை இணையசேவைகள் இணைப்புக்கான தடை அமலில் இருக்கும் என்றும் மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை வெளியான தகவல்களை மிக மோசமாக இருக்கிறது; ஆகையால் இணையசேவை தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைகள் அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் இணையத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications