மாடலிங் பண்றீங்களா? இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம்! சிக்கிய நிர்வாண படங்கள்.. அதிர்ந்த போலீஸ்
காந்திநகர்: மாடலிங் ஆக வேண்டும் என்று விரும்பி குஜராத் வந்த இளம்பெண்ணை ஆசைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க அப்பெண்ணின் அந்தரங்க படங்களையும் வைத்து மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கடந்த சில நாட்களாக மாடலிங் துறையில் வேலை தேடி அலைந்திருக்கிறார். எனவே வாய்ப்புக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். இந்த படங்களை பார்த்த நபர் ஒருவர் தான் போட்டோ கிராபர் எனவும், ஒரு பெரிய மாடலிங் பணிக்காக இளம் பெண் ஒருவரை தேடி வருவதாகவும் கூறி அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் நீண்ட நாட்களாக பேஸ்புக்கில் பேசி வந்துள்ள நிலையில் சமீபத்தில் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். மாடலிங் துறையில் இளம்பெண்ணிற்கு இருக்கும் ஆர்வத்தை ஏற்கெனவே புரிந்து வைத்திருந்த இந்த இளைஞர் இது தொடர்பாக பேச அழைத்ததாக கூறி அடிக்கடி போனில் பேசியுள்ளார். பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

மாடலிங்
இப்படியே போய்க்கொண்டிருக்க கடந்த நவம்பர் மாதம் திட்டமிட்டபடி இந்த நபர் இளம்பெண்ணை குஜராத் அழைத்திருக்கிறார். அதாவது, மாடலிங் பணி வந்துவிட்டதாகவும் எனவே உடனடியாக வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த அழைப்பை உண்மை என்று நினைத்த இளம்பெண்ணும் அகமதாபாத் வந்து சேர்ந்துள்ளார். அப்போதுதான் இவரும் நேரில் முதன் முறையாக சந்தித்துள்ளனர். இதனையடுத்து இவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்த இளைஞர் தனது உண்மையான பேரையும் இந்த சந்திப்பின்போதுதான் கூறியுள்ளார். அதாவது இவரது உண்மையான பெயர் பிரசாந்த் தனக். ஆனால் பேஸ்புக்கில் வேறு பெயரில் இயங்கி வந்துள்ளார்.

விளம்பரதாரர்கள்
இது அப்பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெரியதாக வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் பெரிய பெரிய நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் அப்பெண்ணை காண உள்ளதாகவும் எனவே உடனடியாக ரெடி ஆக வேண்டும் என்று கூறி பெரிய ஓட்டல் ஒன்றில் அறையெடுத்து கொடுத்திருக்கிறார். அந்த அறையில் வைத்து கவர்ச்சிகரமாக சில போட்டோக்களை எடுத்திருக்கிறார். பின்னர் இவர் கூறியதை போல சிலர் வந்துள்ளனர். அப்பெண்ணை பார்த்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தவர்கள் சென்றுவிட்டனர். இது குறித்து அப்பெண் கேள்வியெழுப்பியபோது, விரைவில் நல்ல செய்தி வரும் என்றும், ஆனால் கோஞ்ச நாட்கள் ஆகும் என்றும் இளைஞன் பிரசாந்த் கூறியுள்ளார்.

சந்தேகம்
இதனையடுத்து இளம்பெண்ணின் அறையில் வைத்து அப்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சில அந்தரங்க புகைப்படங்களையும் எடுத்துள்ளார். அதன் பின்னர் அன்று மாலையே அப்பெண் மத்தியப் பிரதேசம் திரும்பி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையில் பிரசாந்த் வாக்கு கொடுத்தது போல யாரும் இப்பெண்ணை தொடர்புகொள்ளவில்லை. சொல்லி வைத்ததை போல பிரசாந்தின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அப்பெண்ணின் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

கைது
இது குறித்து பிரசாந்திடம் கேட்டதற்கு முறையான பதில்கள் ஏதும் வரவில்லை. எனவே மீண்டும் மீண்டும் போன் செய்து விசாரித்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரசாந்த், தான் வேண்டுமென்றே பொய் சொல்லியதாகவும், இது குறித்து வேறு யாரிடமாவது சொன்னால் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதன் பின்னர் அந்த எண் நிரந்தரமாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. இதனையடுத்து இளம்பெண் அகமதாபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் செல்போன் எண்ணை கொண்டு தேடியதில் பிரசாந்த் அகமதாபாத்தின் நவரங்புராவில் உள்ள ஈஷாவர் புவன் அருகே வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை அவரை கைது செய்துள்ளது. விசாரணையில் இதேபோல பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி இவர் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications