ஏமாற்ற முயன்ற காதலன்.. செருப்பால் அடித்து திருமணம் செய்துகொண்ட பெண்!
காதலித்து ஏமாற்ற முயன்ற காதலனை இளம் பெண் ஒருவர் செருப்பால் அடித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: காதலித்து ஏமாற்ற முயன்ற காதலனை இளம் பெண் ஒருவர் செருப்பால் அடித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து ஏமாற்றப்பட்டால் அதனை நினைத்து கண்ணீர் விடுவது, தற்கொலை செய்து கொள்வது அல்லது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் முடிப்பதெல்லாம் அந்தக் காலம்.
காதலிக்கும் நபர் ஏமாற்றினால் அவரது வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபடுவதும் போலீஸில் புகார் அளித்து ஏமாற்றியவருக்கு தக்கப்பாடம் புகட்டுவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

திருமணம்
இந்நிலையில் தன்னைக் காதலித்து ஏமாற்ற முயன்ற இளைஞருக்கு தக்க தண்டைனை கொடுத்து அவரையே திருமணமும் முடித்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

3 வருட காதல்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

வேறொரு பெண்ணுடன்
ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த இவர்கள் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த சந்திரசேகர் பெற்றோர் விருப்பப்படி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார்.

காதலனுக்கு செருப்படி
இதனை அறிந்து கடும் கோபம் கொண்ட திவ்யா தனது உறவினர்களுடன் சென்று சந்திர சேகரையும் அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கினார். தன்னை ஏமாற்ற முயன்ற காதலனை அனைவரின் முன்னிலையிலும் கன்னத்தில் அறைந்ததோடு செருப்பாலும் அடித்தார் திவ்யா.

எச்சரித்த பெண்
இதனால் பதறிப்போனது சந்திரசேகரின் குடும்பம். தொடர்ந்து சந்திர சேகரை தாக்கிய திவ்யா தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்தார்.

கோவிலில் திருமணம்
இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் காதலித்த திவ்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். இதைத்தொடர்ந்து கையோடு காதலனை கோவிலுக்கு அழைத்து சென்ற திவ்யா உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

பரபரப்பு
திவ்யா தனது காதலனை செருப்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏமாற்ற முயன்ற காதலனை செருப்பால் அடித்து இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications