பிறந்த 6 நிமிஷத்துல குழந்தைக்கு ஆதார்.... மஹாராஷ்டிரா அரசின் அடடே வேகம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த 6 நிமிடத்தில் பெண் குழந்தை ஒன்றிற்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மும்பை: பிறந்து 6 நிமிடமே ஆன பெண் குழந்தைக்கு மஹாராஷ்டிர மாநில அரசு ஆதார் அட்டை வழங்கியுள்ளது.
மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 6 நிமிடத்திலேயே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.03 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பாவ்னா சந்தோஷ் ஜாதவ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு ஆதார் எண் கேட்டு பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

அடுத்த 6 நிமிடத்தில் அதாவது 12.09 மணியளவில் குழந்தைக்கான ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். "உஸ்மானாபாத்திற்கு இது பெருமை தரும் சம்பவம், இந்த குழந்தைக்கு ஆதார் எண் வழங்கியது போல மாவட்டத்தில் அனைத்து குழந்தைக்கும் ஆதார் எண் வழங்கப்படும்" என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தாயும் சேயும் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உஸ்மானாபாத் மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ ஆயிரத்து 300 குழந்தைகள் ஆதார் எண் பெற்றுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications