For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியாது என்றால் முடியாது தான்: சுப்ரீம் கோர்ட்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த முடியாது விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி புட்டாசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டடது.

Aadhar card can't be made compulsory: Supreme court

சமையல் எரிவாயு, ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு ஆதார் அட்டையை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறுகையில்,

100 நாள் வேலை உறுதி திட்டம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, ஜன் தன் திட்டம் ஆகிய நான்கு திட்டங்களுக்கு மட்டும் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம். மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். மேலும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியாது.

ஆதார் அட்டை கட்டாயமா இல்லையா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு முடிவு எடுக்கும் வரை ஆதார் எண்ணை விருப்பதின் அடிப்படையில் தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The apex court told that Aadhar card can't be made compulsory and people can use it according to their choice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X