For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்- லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் கட்டாயம் !

ஆன்லைன் ரயில் டிக்கெட் எடுப்பதில் ஏஜெண்டுகளை கட்டுப்படுத்த ஐ.ஆர்.சி.டி.சி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு இனி ஆதார் கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் டிக்கெட்கள் மொத்தமாக பதிவு செய்யப்படுவது, மோசடிகள், ஆள் மாறாட்டம் ஆகியவற்றை தடுக்கும் விதமாக ரயில்வே விரைவில் ஆதார் கார்டை கட்டாயம் ஆக்குகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முதியோர்கள் ரயிலில் பயண சலுகைகளை பெற ஆதார் அடையாள அட்டைகள் கட்டாயம் ஆக்கப்படுகிறது.

Aadhar must for booking train tickets online

2017-2018 ஆம் ஆண்டிற்கான புதிய வர்த்தக திட்டத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று வெளியிட்டு உள்ளார். அதன்படி ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு ரயில்வே டிக்கெட்டை பதிவுசெய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் 60 ஆயிரம் 'பாயிண்ட் ஆப் சேல்' இயந்திரங்கள் மற்றும் 1000 ஆட்டோமெட்டிக் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தைனையை ஊக்குவிக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு முறை ஆதார் அடையாள அட்டை எண்ணை தெரிவிக்க வேண்டும். போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதை தவிர்க்கவே ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதாக மூத்த ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

English summary
Aadhar card will be must for booking train tickets online
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X