முதல்வர் மான் எடுத்த முடிவு! ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுகிறாரா ஹர்பஜன் சிங்?
அமிருரசரஸ்: பஞ்சாபில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றது. இதையடுத்து நேற்றைய தினம் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார்.
தேர்தலுக்கு முன்பே இவர்தான் முதல்வர் வேட்பாளர் என ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

பகவந்த் மான்
இந்த நிலையில் பகவந்த் மானின் பதவியேற்பு விழா சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலனில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அடுத்த மாதம் பஞ்சாப் மாநிலத்தின் சார்பில் தற்போது உறுப்பினர்களாக ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது.

காலியாகும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி
அதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை ஆளும் தரப்பான ஆம் ஆத்மி நிரப்பவுள்ளது. அதில் ஒருவராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படுவார் என்றே தெரிகிறது. முதல்வர் பகவந்த் மான் ஜலந்தரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளதாக உறுதி அளித்திருந்தார்.

விளையாட்டு பல்கலைக்கழகம்
அந்த பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பாளராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பஞ்சாபில் விளையாட்டை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் பகவந்த் மான் எடுக்கும் விதமாக ஹர்பஜன் சிங்கிற்கு எம்பி பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் கூறுகையில் மாநிலத்தில் ஆட்சி அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள எனது நண்பர் பகவந்த் மானுக்கும் வாழ்த்துகள். பகத் சிங்கின் பூர்வீக கிராமத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளது சிறப்பானதாகும். இது நம் எல்லோருக்கும் பெருமையான தருணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications