ஆம் ஆத்மி கட்சி அராஜகவாதிகள் கூடாரம்: சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி அராஜகவாதிகள் கூடாரமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், 'காங்கிரஸ் கட்சி ஆதரவில் தான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடிந்தது. அக்கட்சி அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறது.
இந்திய நாட்டின் அடிப்படை அமைப்பை சீர்குலைத்த ஆம் ஆத்மி கட்சி, அராஜகவாதிகளின் கூடாரமாகவும், மூன்றாம் தர நபர்களை கொண்டதாகவும் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications