நாடாளுமன்றத் தேர்தல்: பிரதமர் வேட்பாளராகிறாரா கெஜ்ரிவால்...? - ஆம் ஆத்மி சூசகம்
டெல்லி: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப் படவில்லை என அக்கட்சியின் மூத்தத் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளதன் மூலம், கெஜ்ரிவால் பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி தொடங்கிர ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களிடம் செல்வாக்கைப் பெற்றுள்ள அக்கட்சி, தனது அடுத்த இலக்காக நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, டெல்லி தவிர பிறமாநிலங்களிலும் தனது கட்சியை வேரூன்றச் செய்யும் நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று இதுபற்றி 'ஆம்ஆத்மி' கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவிடம் கேட்கப் பட்டபோது, 'அரவிந்த் கெஜ்ரிவாலோ அல்லது ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களோநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம், கெஜ்ரிவால், பிரதமர் பதவி போட்டியில் இருப்பதை அவர் சூசகமாக உணர்த்தியதாக கருதப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications