டெல்லியில் ஜன.1 முதல் இலவச குடிநீர் திட்டம் அமல்: கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி: டெல்லியில் இலவச குடிநீர் தரும் திட்டம் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைத்தால் குடும்பம் ஒன்றிற்கு, ஒரு நாளைக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்ததது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அந்த திட்டத்தைப் பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இன்று இலவச குடிநீர் வழங்கும் திட்ட அறிவிப்பு இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டடது.
இதனிடையே, திட்டமிட்டபடி இன்று மாலை குடிநீர் வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் டெல்லியில் ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு 20 கிலோ லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்றும், தினமும் 700 லிட்டருக்கும் சற்று குறைவாக குடிநீர் டெல்லி மக்களுக்கு இலவசமாக தரப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும், வழங்கப்படும் தண்ணீர் அளவைக் கண்காணிக்க குழாய்களில் மீட்டர் பொருத்தப்படும் எனவும், நிர்ணயிக்கப் பட்டதை விட அதிகமாகப் பெறும் தண்ணீருக்கு கட்டணாம் வசூலிக்கப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications