"காஸ் சேம்பராக" மாறிப் போன டெல்லி... சுத்தப்படுத்த வித்தியாசமான ஐடியாவைக் கையில் எடுத்த கெஜ்ரிவால்
டெல்லி: காஸ் சேம்பர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அசுத்தமாகிக் கிடக்கிறது டெல்லி. இதையடுத்து டெல்லியை ஓரளவுக்காவது சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது டெல்லி மாநில அரசு.
அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் சாலைகளில் ஓடும் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவுள்ளனர். அதாவது ஒற்றைப் படை பதிவெண் கொண்ட கார்கள் ஓடும் நாளில் இரட்டைப்படை எண்களைக் கொண்ட கார்கள் ஓடாது என்றும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஓடும் நாளில் ஒற்றைப்படை கார்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உலகிலேயே மிகவும் மோசமான மாசு நிறைந்த நகரம் என்ற பெயர் பெற்ற டெல்லியை ஓரளவுக்காவது சுத்தமானதாக மாற்ற முடியும் என்று டெல்லி அரசு நம்புகிறதாம்.

போலீஸ் தரப்பு அதிருப்தி
இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு டெல்லி காவல்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே தங்களிடம் டெல்லி ஆம் ஆத்மி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி கூறியுள்ளார். டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

நாளை இறுதி விவரம்
இந்தத் திட்டத்தை நாளை இறுதி செய்யவுள்ளது கெஜ்ரிவால் அரசு. இதுதொடர்பாக நாளை ஒரு ஆய்வுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அப்போது திட்டம் இறுதி செய்யப்ட்டு அறிவிக்கப்படும்.

பஸ்கள் கூடுதலாக்க கோரிக்கை
இந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போது டெல்லி போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை விடவும், அதேபோல மெட்ரோ ரயிலை அதிகரிக்கவும் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அது கருதுகிறது.

போலீஸ் அதிருப்தி
ஆனால் இந்தத் திட்டம் பல அசவுகரியங்களுக்கே வழி வகுக்கும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தேவையில்லாத குழப்பத்தையே ஏற்படுத்தும். டெல்லி அரசு இதுகுறித்து எங்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் என்றார்.

ஏதாவது செய்தாக வேண்டும் - கெஜ்ரிவால்
திடீரென பாதிக் கார்களை சாலையிலிருந்து குறைத்தால் அதைச் சமாளிக்கக் கூடிய வகையில் பஸ் போக்குவரத்து இல்லை என்று கூறப்படுவது குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவா்ல் கூறுகையில், உண்மைதான். ஆனால் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அப்படி செய்தால்தான் டெல்லியைக் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார் அவர்.

தனியார் கார்களுக்கு மட்டுமே்
இருப்பினும் இந்தத் திட்டம் தனியார் கார்களுக்கு மட்டுமே. மாறாக அரசுக் கார்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications