கெஜ்ரிவால் உரையுடன்... அரியானாவில் தொடங்கியது ஆம் ஆத்மியின் லோக்சபா தேர்தல் பிரச்சாரம்
ரோக்டாக்: விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று அரியானாவில் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியது ஆம் ஆத்மி கட்சி.
நாடாளுமன்றத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டன. பாஜக சார்பில் அதன் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி மாநில வாரியாக பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
அதேபோல், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கட்சி ஆட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி தற்போது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி செயல் பட்டு வருகிறது.

ஆம் ஆத்மியின் பிரதம வேட்பாளராக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், இன்று தனது தேசிய அளவிலான பிரச்சாரத்தை அரியானாவில் இருந்து தொடங்கியுள்ளது உள்ளது ஆம் ஆத்மி.
அரியானா மாநிலம் ரோக்டாக்கில் தொடங்கிய பொதுக்கூட்ட பேரணியில் கெஜ்ரிவால் உரையாற்றினார். இந்த பேரணியில் கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனது உரையில் கெஜ்ரிவால் முகேஷ் அம்பானி மற்றும் மோடி குறித்துப் பேசினார். முகேஷ் அம்பானி குறித்தான தனது கேள்விகளுக்கு மோடி ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மோடி மற்றும் ராகுல் தொடர்பான செய்திகளை அம்பானி அளித்ததாக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மூலம் தனக்கு தகவல் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தனது ராஜினாமா குறித்துப் பேசுகையில் ‘லோக்பால் மசோதா நிறைவேறாததாலேயே நான் ராஜினாமா செய்தேன். மற்றப்படி பாஜகவினர் மற்றும் காங்கிரஸார் கூறுவது போல அரசியலில் இருந்து நான் ஓடி விடவில்லை'என கெஜ்ரிவால் கூறினார்.
முன்னதாக இந்த பேரணிக்கு தடைவிதிக்க காங்கிரஸ் தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டதாகவும், பொதுக்கூட்ட பேரணி தொடர்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற ஹூடா அரசு உத்தரவிட்டதாகவும், கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஆட்டோ டிரைவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டதாகவும், அரியானா ஊரக வளர்ச்சி துறையும் ஆம் ஆத்மி பேரணிக்கு அனுமதி வழங்கும் விவாகாரத்தில் தொல்லை தந்தது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications