பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய கொடி: ஆம் ஆத்மி தலைவர் விஷ்வாஸுக்கு எச்சரிக்கை
அமேதி: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அமேதி மாவட்ட நிர்வாகம் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விதிகளை மீறி தேசியக் கொடியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் முன்னா சிங் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆ.டி. ராமிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அமேதி மாவட்ட நிர்வாகம் விஷ்வாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை மீறி அவர் கொடியை பயன்படுத்தினால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராம்கஞ்ச் பகுதியில் விஷ்வாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த கவி சம்மேளன் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கவி சம்மேளன் நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் ஏற்பாடு செய்தபோதிலும் காங்கிரஸால் தான் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விஷ்வாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் தடையை மீறி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறைக்கு செல்ல தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications