டெல்லி: ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி
டெல்லி: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டு பகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தர்ணா போராட்டத்தின் போது பேசிய அவர், டெல்லியில் வாழும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று கூறினார்.

தற்போது டெல்லியில் மழை பெய்து வருவதால் கெஜ்ரிவால் காரில் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டம் காரணமாக மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சில சாலைகள் மூடப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் நாளை வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருகிறது.
இந்த நிலையில் ரைசினா சாலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் தொண்டர்கள் சிதறி ஓடியதில் பரபரப்பு ஏற்பட்டது.
காவலுக்கு நின்றிருந்த போலீசார் மீது ஆம் ஆத்மி தொண்டர்கள் கற்களை வீசியதாகவும், இதில் ஒரு போலீசார் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications