நிதீஷ் குமார் வெற்றிக்கு அனில் போல உதவிய கெஜ்ரிவால் அனுதாபிகள்
டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக பத்து லட்சம் பேரிடம் வாக்கு சேகரித்து நிதீஷ் குமாரின் வெற்றிக்கு உதவியுள்ளனர் ஆம் ஆத்மி கட்சியின் அனுதாபிகள்.
இவர்கள் ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக கெஜ்ரிவால் மீது அபிமானம் கொண்டவர்கள். சமூக வலைதளத்தில் பிசியாக இருப்பவர்கள். 20ம் தேதி முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ளார் நிதீஷ் குமார். பதவியேற்பு விழாவுக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையி்ல நிதீஷ் வெற்றிக்கு தாங்களும் கணிசமாக உதவியதாக இவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முழுநேரமாக செய்ததாக இவர்கள் கூறியுள்ளனர்.

சமூக வலைதளத்தில்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சமூக வலைதளம் மூலமாக நாங்கள் நிதீஷுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டோம். 24க்கும் மேற்பட்டோர் அடங்கியோர் குழுவாக இதை செய்தோம்.

கட்சிக்காரர்கள் அல்ல
நாங்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல. அதன் மீது ஈடுபாடு கொண்டவர்கள். பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்ந்து நாங்கள் நிதீஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம்.

எங்களைக் கேட்டுக் கொண்டனர்
நாங்கள் சமூக வலைதளத்தில் சிறப்பாக செயல்படுவோம் என்பதால் எங்களுக்காக பிரசாரம் செய்யுங்கள் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். எனவே நாங்கள் இதில் ஈடுபட்டோம் என்றனர் அவர்கள்.

நிறைய செய்தனர்
இதை ஐக்கிய ஜனதாதளத்தின் கே.சி.தியாகியும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், மிகப் பெரிய அளவில் அவர்கள் உதவினர். அதை மறக்க முடியாது. சமூக வலைதளப் பிரசாரம் எங்களது வெற்றியில் முக்கியமாக அமைந்தது என்றார் தியாகி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications