நெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு
(இன்றைய (மார்ச் 5 ) நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
நெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் திருத்தப்பட்டுள்ள விலைப் பட்டியலை அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.
தமிழக பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தமிழகம் முழுவதும் இருந்து நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் வரை கொள்முதல் செய்கிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் 25 மாவட்ட ஒன்றியம் மூலமாக, சராசரியாக 28 லட்சம் லிட்டர் பாலை நாளொன்றுக்கு விற்பனை செய்கிறது. மீதமுள்ள பால், ஆவின் பால் பொருட்கள் செய்யபயன்படுத்துகிறது. அதன்படி, நெய், தயிர், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்கிறது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது: முடிவுக்கு வந்த 18 நாள் தேடுதல் வேட்டை
- ஆவின் பால் ரூ.10 விலையேற்றம்; பால் கொள்முதல் விலை அதிகரிப்பு - BBC News தமிழ்
முதல்வராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக அறிவித்தார். இந்த விலை குறைப்பு கடந்த மே 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.இந்நிலையில், நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிய விலைமாற்றம் மார்ச் 4-ம் தேதி (நேற்று)முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, நெய், ஒரு லிட்டர் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆகவும், அரை லிட்டர் ரூ.265-ல் இருந்து ரூ.275 ஆகவும், 200 மில்லி ரூ.115-ல்இருந்து 120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 15 லிட்டர் டின் ரூ.8,350-ல் இருந்து ரூ.8,680 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.20 அதிகரித்து ரூ.100 ஆகவும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கோன் ஐஸ்கிரீம் வகைகள் (100 மில்லி) ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேட்டபோது ஆவின் அதிகாரிகள் கூறியதாவது, ஆவின் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்படவில்லை. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் இருந்த பொருட்களுக்கு, அதிகபட்சமாக 3.8 சதவீதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நெய் ஒரு லிட்டர் ரூ.695 வரை விற்கப்படுகிறது. ஆனால், ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.515 ஆகவே (தற்போது ரூ.535) இருந்தது.
இந்த இடைவெளியை பயன்படுத்தி, ஆவின் பொருட்களை குறைவான விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்கவும் இந்த விலை ஏற்றம் உதவும். அதேபோல, நறுமண பாலுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெட்டியில் அடைத்து விற்கப்படும் ஸ்ட்ராபெரி, வெண்ணிலா உள்ளிட்ட நறுமண பால் வகைகளின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆவின் பால் பொருட்கள் விலைஉயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பால்விலையை லிட்டருக்கு ரூ.3குறைத்துவிட்டு, பால் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு, மறுபக்கம் அவற்றை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது. இது ஏழை மக்களை ஏமாற்றும் செயல். விலை உயர்வைஅரசு உடனே திரும்ப பெற வேண்டும்', எனக் கூறியதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மோத உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள்
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோத உள்ளதாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய வீரர்களை உள்ளடக்கியது.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்
- விராட் கோலி: 100வது டெஸ்டில் விளையாடும் ஜாம்பவானின் கிரிக்கெட் பயணம்
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. இதனால் இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு நாளில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
400 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் காரணமாக 2 நாளில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே கடந்த இரண்ட நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தம், வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த நேற்று முன்தினம் மாலையில் மத்திய வங்கக் கடல் பகுதியில், சென்னைக்கு 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகள் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும். அதனால், அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ரூ.1,682 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாட்டுக்கு எவ்வளவு?
- கொரோனா ஊரடங்கால் சீனாவில் உண்டான அதீத மழை, வெள்ளம்
மார்ச் மாதத்தில் இதுபோன்ற காற்றழுத்த நிகழ்வுகள் ஏற்படுவது பொதுவாக நடப்பதில்லை. இதற்கிடையே, கடலோரப் பகுதிகள், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும், 6ஆம் தேதி 7ஆம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 35 கிமீ வேகம் முதல் 45 கிமீ வேகத்தில் வீசும். தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் , மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- மு.க. ஸ்டாலின் உத்தரவு: "தலைமையை மதிக்காமல் பதவியேற்றவர்கள் பதவி விலகுங்கள்"
- யுக்ரேன் மோதல்: புதினுக்கு நிழலாக விளங்கும் உள் வட்டாரம் - அறியப்படாத தகவல்கள்
- தமிழ்நாடு: கும்பகோணம் மேயர் ஆன ஆட்டோ டிரைவர் - டெல்டாவின் மேயர்கள் யார்
- யுக்ரேன் போர்: அணு ஆயுத அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே














Click it and Unblock the Notifications