இன்று தாக்கலாவது 67வது பட்ஜெட்.. 10 முறை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் 67வது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டை 10 முறை தாக்கல் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய். முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தது தமிழரான ஆர்.கே. சண்முகம்.
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இன்றைய மத்திய பட்ஜெட். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது.

நமது நாட்டின் பட்ஜெட் குறித்த சில தகவல்கள்..
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளன்று நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
- இந்த பட்ஜெட் நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்
- நாட்டில் இதுவரை 66 முறை பட்ஜெட்களும், 12 முறை இடைக்கால பட்ஜெட்களும், 4 முறை சிறப்பு பட்ஜெட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று அருண்ஜேட்லி தாக்கல் செய்வது 67 வது முழு பட்ஜெட்.
- நாட்டின் முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே. சண்முகம் 1947 நவம்பர் 26-ந் தேதி தாக்கல் செய்தார்.
- நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய்தான் மிக அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
- 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டை 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி 2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் தாக்கல் செய்தார். ப.சிதம்பரம் மொத்தம் 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- முன்னதாக 2012-2013 ஆம் ஆண்டு பட்ஜெட்டை 2012 ஆம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இது அவரது 7வது பட்ஜெட்.
- யஷ்வந்த் சின்கா, ஒய்.பி. சவான், சி.டி. தேஷ்முக் ஆகியோரும் 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
- மன்மோகன் சிங், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் 6 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
- 2000ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
- 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் முற்பகல் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அப்போது யஷ்வந்த்சின்ஹா நிதி அமைச்சராக இருந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications