சத்தீஷ்கரில் பாஜக - காங். இரு கட்சிகளுக்குமே ஷாக் கொடுத்த ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு
ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். இதில் பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே கடுமையான போட்டி நிலவும் எனவும் ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து கடந்த 2000 -ஆம் ஆண்டு சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.. இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் 2003-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் 2008 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடர்ந்தது.

அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 39 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 2003 முதல் 2013 வரை நடந்த 3 சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
ஆனால் 2018-ல் தான் அப்படியே அடியோடு மாறியது. இந்த முறை பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதும், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.
சத்தீஷ்கரில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. சத்தீஷ்கரை பொறுத்தவரை மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் ஆகும். இதனால், தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. அதாவது, நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 74 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின.
ஐந்து மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சத்தீஷ்கர் மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஏபிபி நியூஸ் - சி வோட்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி, சத்தீஷ்கரில் பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே கடுமையான போட்டி நிலவும் என தெரிவித்துள்ளது.
ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 36-48 தொகுதிகள் வெற்றி பெறும். காங்கிரஸ் 41-53 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
சத்தீஷ்கரில் மொத்த தொகுதிகள்: 90
பெரும்பாண்மைக்கு - 46
காங்கிரஸ்: 41-53
பாஜக: 36-48.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications