லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்குமா, அரியணையை இழக்குமா.. ரிசல்ட் இந்த பெண் கையில்

Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்குமா, அரியணையை இழக்குமா.. ரிசல்ட் இந்த பெண் கையில்

டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியின், வாழ்வும், சாவும் மாயாவதியின் கைகளில்தான் உள்ளது என்கிறது ஏபிபி டிவி சேனலும் சி வோட்டர் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு.

தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி டிவி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தன. இந்த கருத்துக் கணிப்பில் பெரிய மாநிலங்களான மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்டவற்றில் பாஜக எளிதாக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆச்சரியப்படத்தக்க வகையில், வட கிழக்கு மாநிலங்களிலும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஒடிசாவில் கூட பிஜு ஜனதா தளத்தை விட பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்பது இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்த தகவல்.

[ஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்! ]

தென் மாநிலங்கள்

தென் மாநிலங்கள்

அதேநேரம், தென் மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு தான் முதலிடம் என்றும், இரண்டாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைக்கும் என்றும், மூன்றாவது இடம்தான் பாரதிய ஜனதா கூட்டணிக்கு என்றும் தெரியவருகிறது. இதன்மூலமாக பாரதிய ஜனதா கட்சி எளிதாக வெற்றி பெறுவதற்கு தென்மாநிலங்கள் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கப் போகின்றன என்பது மட்டும் உறுதி ஆகிவிட்டது. இருந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 276 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

உ.பி. முக்கியம்

உ.பி. முக்கியம்

ஆனால், சில விளம்பர படங்களில், நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று கூறுவார்களே, அது போல இந்த விஷயத்திலும் உத்தரபிரதேசத்தின் விவகாரங்களுக்கு உட்பட்டது என்பதே நிபந்தனை. ஆம்.. உத்தரபிரதேசம் என்பது மிகப்பெரிய மாநிலம். அந்த மாநிலத்தில் மட்டும் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 71 தொகுதிகளை வென்றது. சமாஜ்வாதி 5 இடங்களை வென்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளை வென்ற நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் எந்த தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை.

தனித்து போட்டியிட்டதால்

தனித்து போட்டியிட்டதால்

உத்தரப்பிரதேசத்தில் பெற்ற இந்த மாபெரும் வெற்றிதான், பாரதிய ஜனதா கட்சியை எளிதாக அரியணையில் அமர்த்தியதற்கு, முக்கிய காரணம். எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டது தான் பாஜக வெற்றிக்கு காரணம். கருத்துக்கணிப்பிலும் கூட அதுதான் சொல்லப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவருக்கு 56 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும். பாஜக கூட்டணிக்கு 24 தொகுதிகள் தான் கிடைக்குமாம்.

மாயாவதி கையில்

மாயாவதி கையில்

காங்கிரஸ் கட்சி, இந்த கூட்டணியில், சேராமல் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி மட்டும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட கூட்டணிக்கு 42 தொகுதிகள் வரை கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 36 தொகுதிகள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும். ஆனால் ஒருவேளை மாயாவதி கடந்த முறையை போலவே சமாஜ்வாதி காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டால், அப்போது பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும் லாபம் அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் 70 தொகுதிகளை எளிதாக வந்து விடும் என்கிறது இந்த கருத்துக்கணிப்பு. எனவே மாயாவதி தனித்து சென்றுவிடக்கூடாது, சமாஜ்வாதி மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே மாயாவதி முடிவில்தான் அடுத்து மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருமா அல்லது காங்கிரஸ் வருமா அல்லது மூன்றாவது கூட்டணி அணி ஆட்சி அமையுமா என்பது உறுதியாகத் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+