என்னது, நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகுமா?: அமித் ஷாவை கிண்டலடிக்கும் எதிர்கட்சிகள்
டெல்லி: தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல காலம் வரும் என்று கூறிவிட்டு தற்போது நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளதை பல அரசியல் கட்சி தலைவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல நாள்(காலம்) வரும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷாவோ நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதை பார்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அமித் ஷாவின் பேச்சை கிண்டல் செய்து பேட்டி அளித்தனர். நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று பாஜக தெரிவித்திருந்தால் யாராவது அந்த கட்சிக்கு வாக்களித்திருப்பார்களா என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இதை எல்லாம் பார்த்த பாஜக அமித் ஷா அவ்வாறு கூறவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில்,
பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. ஊழலை முற்றிலும் ஒழித்துவிட்டு 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியா மிகவும் பெருமையுடன் இருந்தது. அந்த பழமையான பெருமையை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் ஆகும் என்று தான் அமித் ஷா தெரிவித்தார். பாஜகவுக்கு கெட்டப் பெயர் ஏற்பட வேண்டும் என சிலர் நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று அவர் தெரிவித்ததாக கூறிவிட்டனர் என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications