கள்ளத் தொடர்பு விவகாரம்: சசி தரூரிடம் இருந்து விவாகரத்து பெற சுனந்தா முடிவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய சுனந்தா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவிருக்கிறார்.

மத்திய அமைச்சர் சசி தரூரின் ட்விட்டர் கணக்கில் காதல் ட்வீட்கள் வந்தன. இதையடுத்து தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தரூர் தெரிவித்தார். ஆனால் அவரது மனைவி சுனந்தாவோ தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தராருக்கும் இடையேயான கள்ளத்தொடர்பை உலகிற்கு தெரிவிக்க தான் தான் தரூரின் கணக்கில் இருந்து காதல் செய்திகளை போஸ்ட் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுனந்தா ட்விட்டரில் கூறுகையில்,

சுனந்தா

சுனந்தா

என் ட்வீட்களுக்கு நான் உத்தரவாதம். அந்த பெண் என் கணவரை பின் தொடர்கிறார். ஆண்கள் முட்டாள்கள். அந்த பெண் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட், இந்த உலகில் காதல், உண்மையாக இருப்பது எங்கே என்று சுனந்தா தெரிவித்துள்ளார்.

புதிய காதல்

புதிய காதல்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தரூருக்கும், மெஹருக்கும் இடையே கள்ளத் தொடர்பு உள்ளது என்று தெரிவித்த சுனந்தா இதனால் ஒரு பெண்ணாக, மனைவியாக தான் நிலை குலைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். ட்விட்டர் தவிர பிளாக்பெர்ரியிலும் அவர்கள் மெசேஜ் அனுப்பிக் கொள்கின்றனர் என்றார் சுனந்தா.

விவாகரத்து

விவாகரத்து

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு சசி தரூரிடம் இருந்து விவாகரத்து கோரப் போவதாக சுனந்தா தெரிவித்தார்.

கோபக்கார சுனந்தா

கோபக்கார சுனந்தா

முன்னதாக கடந்த 2ம் தேதி துபாயில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் சசி தரூர் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல் நிலவரம் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். இதை பார்த்த சுனந்தா கோபமடைந்து பத்திரிக்கையாளரை பார்த்து நான் ஏற்கனவே அர்னாப் கோஸ்வாமியின்(டைம்ஸ் நவ் செய்தியாளர்) மீது மதுவை ஊற்றியுள்ளேன், உங்கள் மீது ஊற்ற முடியாது என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார். சுனந்தா ஏன் இப்படி கோபப்படுகிறார் என்பது புரியாத தரூர் மவுனமாக அங்கிருந்து சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+