For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அப்பீல் வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா: அரசாணை வெளியிட்டது கர்நாடகா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது.

Acharya will be the public procecuter for Jayalalitha asset case: Karnataka issues order

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய கர்நாடக அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஹைகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம்கோர்ட்டிலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அதற்கான அரசாணை, இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும். ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு செய்ய கர்நாடக தரப்பு திட்டமிட்டுள்ளது.

English summary
The Karnataka government issued a G.O for appointing Mr. Acharya as public procecuter for Jayalalitha asset case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X