For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலாளியின் மனைவியை கடத்திய நபர்.. கண்களுக்குள் ஆசிட் ஊற்றி தண்டனை.. பீகாரில் கொடூரம்

பீகாரில் பெண் ஒருவரை கடத்திய குற்றவாளியின் கண்களில் ஆசிட் ஊற்றப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் பெண் ஒருவரை கடத்திய குற்றவாளியின் கண்களில் ஆசிட் ஊற்றப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட யாருடைய பெயரும் வெளியிடப்படவில்லை.

பாட்னாவில் இருக்கும் பெஹுசரை என்ற கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் மனைவி காணாமல் போனதாக கூறப்பட்டது. அந்த பெண்ணை கடத்திய குற்றத்திற்காக அந்த முக்கியஸ்தரின் வீட்டில் வேலை பார்த்த நபருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது போலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 பெண் காணவில்லை

பெண் காணவில்லை

பெஹுசரை என்ற கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் மனைவி அதே வீட்டில் வேலை பார்த்த பணியாளர் ஒருவருடன் ஓடிப் போய்விட்டத்தக்க கூறப்பட்டது. ஆனால் கொஞ்ச நேர்தத்த்தில் அந்த ஓடிப்போகவில்லை கடத்தப்பட்டு இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த பணியாளரை தீவிரமாக தேடி வந்தனர்.

 மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

இதுகுறித்த புகார் கொடுக்கப்பட்ட மறுநாளே அந்த பெண் மீண்டு வந்துள்ளார். அங்கு இருக்கும் கீழ் கோர்ட் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். தன் கணவனை மீண்டும் வந்து கூட்டி செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த கடத்தல்காரன் மீது இருந்த வழக்கும் வாபஸ் வாங்கப்பட்டது.

 அழைத்து சென்றனர்

அழைத்து சென்றனர்

ஆனால் இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் பழிவாங்கும் படலம் தொடங்கி உள்ளது. அந்த பெண் மீண்டும் உங்களுடன் வாழ விரும்புகிறாள், என்று கூறி அந்த கடத்தல்காரனை அங்கு இருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்.

 ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சு

20 பேர் வந்து தாக்கி இருக்கிறார்கள். பின் அவரை அங்கு இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்று கண்களில் ஆசிட் ஊற்றி இருக்கிறார்கள். அவருடைய பார்வை மொத்தமாக பறிபோய் இருக்கிறது. அந்த 20 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.

English summary
Acid poured in a man's eyes for kidnapping Employer's wife in Bihar. Police is currently searching for the 20 more convicts in this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X