For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ500, ரூ1000 நோட்டுகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் பங்க் உரிமங்கள் ரத்து- மத்திய அமைச்சர் வார்னிங்

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை நவ. 11 வரை ஏற்க மறுத்தால் பெட்ரோல் பங்க் உரிமங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரூ500, ரூ1,000 நோட்டுகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் பங்க் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்பது அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றில் நவம்பர் 11-ந் தேதி வரை இந்த ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

Action against petrol pumps for not accepting Rs 500, Rs 1000 notes, warns Dharmendra Pradhan

ஆனால் மத்திய அரசின் உத்தரவை ஏற்காமல் ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன பெட்ரோல் நிலையங்கள். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டன.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரூ500, ரூ1,000 நோட்டுகளை வாங்க மறுக்கும் பெட்ரோல் பங்க் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Dharmendra Pradhan
English summary
Following reports of several petrol pumps not accepting Rs 500 and Rs 1000 currency notes from people after demonitisation of the high denomination notes, Union Petroleum and Natural Gas Minister Dharmendra Pradhan today said that strict action will be taken against such outlets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X