டெஹல்கா பவுண்டேஷன்-அருணா ராய் விலகல்! சோமா செளத்ரிக்கு எதிராக போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலியல் புகார் சர்ச்சையை தொடர்ந்து டெஹல்கா வார இதழின் பவுண்டேஷனில் இருந்து சமூக ஆர்வலர் அருணா ராய் விலகியிருக்கிறார்.

டெஹல்கா வார இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால், சக பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

அத்துடன் தருண் தேஜ்பாலுக்கு எதிராக டெஹல்காவின் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரியும் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.

Activist Aruna Roy resigns from Tehelka Foundation

இந்நிலையில் டெஹல்கா பவுண்டேஷனில் இருந்து சமூக ஆர்வலர் அருணா ராய் விலகியிருக்கிறார். இதனிடையே டெல்லியில் உள்ள சோமா செளத்ரி இல்லம் முன்பு பாஜக எம்எல்ஏ விஜய் ஜோலி தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,

தேஜ்பால் மீதான பாலியல் புகாரை மறைக்க முயன்றதாகவும், தேஜ்பாலுக்கு ஆதரவாக நடந்து கொண்தாகவும், சோமா செளத்ரி மீது அவர்கள் குற்றம்சாட்டினார்.

மேலும் சோமாவின் காரை மறித்து முற்றுகையிட்ட அவர்கள், வீட்டின் முன்பு இருந்த பெயர்பலகையை தார்பூசி அழித்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+