2 மணிநேரம் பரோலில் வெளியே வந்த நடிகர் திலீப் மீண்டும் "உள்ளே" சென்றார்
நடிகை கடத்தல் வழக்கில் 2 மாத சிறை தண்டனை அனுபவித்து வந்த நடிகர் திலீப் தனது தந்தையின் நினைவு தின சடங்கில் கலந்து கொள்வதற்காக பரோலில் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
கொச்சி: நடிகை கடத்தல் வழக்கில் 2 மாதங்களாக ஆலுவா சிறையில் இருந்த நடிகர் திலீப் தந்தையின் நினைவு தின சடங்கில் கலந்து கொள்வதற்காக பரோலில் வெளியே வந்த அவர் அலுவல் முடிந்தவுடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தந்தையின் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று ஆலுவா சிறையிலிருந்து வெளியே வந்தார் திலீப். பின்னர் தந்தையின் நினைவு தினத்தையொட்டி செய்ய வேண்டிய சடங்குகளில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர் மீண்டும் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.
படப்பிடிப்பில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த கேரள நடிகை, காரில் கடத்திச் செல்லப்பட்டு 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கடந்த மாதம் 24-ஆம் தேதி திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக திலீப்பின் ஜாமீன் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது தந்தைக்கு புதன்கிழமை இறுதி சடங்கு நடைபெறுவதால் பரோல் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் திலீப் விண்ணப்பித்திருந்தார்.
இந்த சடங்கு இரு இடங்களில் நடைபெறவுள்ளதால் பலத்த பாதுகாப்புடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திலீப்புக்கு பரோல் வழங்கி கடந்த சனிக்கிழமை அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தந்தையின் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று ஆலுவா சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் திலீப்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications