குஜராத் கலவரத்தை மறக்கவோ… மன்னிக்கவோ முடியாது: நிதிஷ்குமார்
பாட்னா: "குஜராத் கலவரம் மன்னிக்க மற்றும் மறக்க முடியாதது"என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர், மோடிக்கு எதிரான கருத்துக்களையே நிதிஷ்குமார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் நடந்த பட்டம் விடும் விழாவில் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்ட இந்தி நடிகர் சல்மான் கான், குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று கூறினார். தொடர்ந்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சல்மான் கான் கூறுகையில், மோடி வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று சல்மான் கான் கூறியது குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிதிஷ் குமார் "குஜராத் கலவரம் மன்னிக்க மற்றும் மறக்க முடியாதது" என்றார்.
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதாவுடனான 17 வருட கூட்டணியை உடைத்து கொண்டு ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது நினைவிருக்கலாம்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications