தொடர் படப்பிடிப்பு.. நடிகர் சுதீப் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் சுதீப் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். விஜய்யுடன் ‘புலி' மற்றும் ‘பாகுபலி' படங்களிலும் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவனப் பிடி' என்ற படத்திலும் சுதீப் நடித்து வருகிறார். மேலும்‘ஹெப்புலி' எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நேற்று சுதீப்பிற்கு திடீர் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘நான் ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்து விட்டது. ஓய்வு எடுத்தால் சரியாகி விடும். எனவே எனது உடல் நிலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications