திடீரென பிரதமர் மோடியின் காலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா ராய்.. சாய்பாபா நூற்றாண்டு விழா மேடையில் சுவாரசியம்
அமராவதி: புட்டபர்த்தியில் நடந்த ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது மேடையில் அனைவரும் அமர்ந்திருக்க நடிகை ஐஸ்வர்யா ராய், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றது அனைவரின் கவனத்தையும் பெற்றது. மேலும் அந்த விழாவில் ஜாதி, மதம், மொழி குறித்து ஐஸ்வர்யா ராய் சொன்ன கருத்துகள் கைத்தட்டுகளை குவித்தது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, கிஷாண் ரெட்டி உள்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் உள்பட சாய்பாபா பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் பற்றி பேசினார். ஒவ்வொருவரும் மற்றவர்களின் மீது அன்பு காட்டுவது எவ்வளவு முக்கியம்? என்பது பற்றி விளக்கி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது: ‛‛ இங்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த சிறப்பான நாளில் அவர் எங்களுடன் இருப்பதற்கு நன்றி.
எப்போதும் பெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும் தரக்கூடிய உங்களின் மகிழ்வான வார்த்தைகளை இன்று கேட்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களின் இந்த வருகை இந்த நூற்றாண்டு விழாவுக்கு புனிதம் மற்றும் உத்வேகம் அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் தலைமையான சேவை என்பது மனிதனுக்கு சேவை செய்வது தான் என்று சுவாமியின் (சத்யசாய் பாபா) செய்தியை நான் கூற விரும்புகிறேன்.
ஒரு ஜாதி தான் உள்ளது. அதன் பெயர் மனிதகுலம். அதேபோல் ஒரு மதம் தான் உள்ளது. அந்த மதத்தின் பெயர் லவ் (அன்பு). அதேபோல் ஒரு மொழி தான் உள்ளது. அந்த மொழி இதயத்தின் மொழி. ஒரேயொரு கடவுள் தான் உள்ளார். அவர் தான் எங்கும் நிறைந்துள்ளார். சாய்ராம்.. ஜெய்ஹிந்த்.
'' என்றார்.
மேலும் விழா மேடையில் பிரதமர் மோடி அமர்ந்திருந்தார். அப்போது நடிகை ஐஸ்வர்யா ராய் பிரதமர் மோடியின் அருகே சென்று அவரது காலை தொட்டு வணங்கினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்" படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்தப் புதிய படங்களிலும் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications