15,539.9 மெகாவாட் மின் உற்பத்தி.. மாபெரும் சாதனை படைத்த அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்.. அசத்தல்
டெல்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) நிறுவனம், 2025 ஜூன் 30ஆம் தேதி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான இது, 15,000 மெகாவாட் (MW) திறனை தாண்டி, தற்போது 15,539.9 மெகாவாட் திறனை கொண்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜியின் சாதனை
இந்த மொத்த திறனில், சுமார் 11,005.5 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்கள் மூலமாகவும், 1,977.8 மெகாவாட் காற்றாலை மின்சக்தி திட்டங்கள் மூலமாகவும், 2,556.6 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி கலப்பு திட்டங்கள் மூலமாகவும் கிடைக்கிறது. இந்த சாதனை, அதானி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தொடர்ந்து முன்னேறி வருவதை காட்டுகிறது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கன்னா இதுகுறித்து கூறுகையில், "15,000 மெகாவாட் திறனை தாண்டுவது பெருமை அளிக்கிறது. இது எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு, தொலைநோக்கு, முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தொடர் பங்களிப்பு மூலம் இந்த சாதனையை மேற்கொண்டு உள்ளோம்.
அதானியின் ஆற்றல், வேகத்தை நிரூபிக்கும் சிறப்பான முயற்சி இது. 2030 ஆம் ஆண்டுக்குள் 50,000 மெகாவாட் திறனை எட்டுவதே எங்கள் இலக்கு, அதற்கான தீர்வுகளை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம்" என்றார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரம்
AGEL நிறுவனத்தின் இந்த 15,539.9 மெகாவாட் மின் உற்பத்தி திறன், சுமார் 7.9 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது. இதன் மூலம், பல மாநிலங்களில் உள்ள வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்களில் ஒன்றை குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் அமைத்து வருகிறது. இது 30,000 மெகாவாட் திறன் கொண்டது. இந்த பூங்கா 538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும்.
தற்போது, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 5,355.9 மெகாவாட் மின் உற்பத்தி திறனை எட்டியுள்ளது. இது இந்தியாவின் 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கான 500 ஜிகாவாட் புதைபடிம எரிபொருள் அல்லாத மின் உற்பத்தி இலக்கை நோக்கி ஒரு முக்கியமான படியாகும்.
ஒட்டுமொத்தமாக, அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் இந்த சாதனை, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. மேலும், நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்களில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி தீர்வுகளை வழங்க உறுதி பூண்டுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications