டெல்லியின் ”அதிதி ஆர்யா” – இந்தப் அழகுப் பெண்தான் 2015ம் ஆண்டின் “மிஸ் இந்தியா”!
டெல்லி: 2015 ஆம் ஆண்டிற்கான இந்திய அழகியாக டெல்லியைச் சேர்ந்த அதிதி ஆர்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் 13 நகரங்களில் நடைபெற்ற இதற்கான தேர்வில் 21 அழகிகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மும்பை யஷ்ராஜ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் பல்வேறு பிரிவுகளில் இறுதி போட்டிகள் நடந்தது.

மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டிக்கு 5 பேர் அழைக்கப்பட்டனர். பின்னர் முதல் மூன்று இடங்களுக்கான அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் முடிவில் அதிதி ஆர்யா முதலிடத்தையும், ஆப்ரி்க்ரச்சேல் வாஸ் 2 ஆம் இடத்தையும், வர்டிகாசிங் 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.
உலக அழகிப்போட்டிக்கான தேர்வின் போது இந்தியா சார்பில் அதிதி ஆர்யா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவர்களாக பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அனில்கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே, அபுஜானி, சந்தீப் கோஸ்லா ஆகியோர் இருந்து முதல் 3 இடம் பிடித்த அழகிகளை தேர்வு செய்தனர். நடிகை ஜாக்குலியின் பெர்னான்டஸ், நடிகர் ஷாகித் கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
அதிதி ஆர்யா டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி பகுப்பாளராக பணிபுரிகிறார். இங்கு பணியில் இருந்து கொண்டே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications