ஆளுநர் மீது புகார்.. தமிழகம் குறித்து விவாதிக்க லோக்சபாவில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
ஆளுநர் தாமதத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி லோக் சபாவில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக எம்பி வேணுகோபால் கொண்டு வந்தார்.
டெல்லி: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ், சசிகலா முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தாமதப்படுத்தி வருகிறார் என்று கூறி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசியல் சூழல் அசாதாரணமாக உள்ளதால், லோக் சபாவின் துணை சபாநாயகரான தம்பி துரை தலைமையில் அதிமுக எம்பிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தின் இரண்டு அவைகளிலும் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் தாமதம் செய்து வருகிறார் என்று புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக லோக்சபாவில் எம்பி வேணுகோபால் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
லோக்சபாவில், ஆளுநர் தமிழகத்திற்கு வராமல் கால தாமதப்படுத்துவதற்கும், ஏற்கனவே எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரை முதல்வராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. எனவே, இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுமா என்பது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கையில் உள்ளது. அப்படி நடத்தப்பட்டால் மத்திய அரசு அளிக்கும் விளக்கம் என்ன என்பது தெரியவரும்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications