காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.,க்கள் போராட்டத்தில்
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி.,க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 9வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுவே இறுதித் தீர்ப்பு என்றும் இதனை எதிர்த்து எந்த மேல்முறையீடும் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வருகின்றன. இதுதொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடியை சந்தித்து முறையிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடந்த சட்டசபை சிறப்புக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றினார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யவும் தயார் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications