நீட் தேர்வில் விலக்குக்கோரி ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் முழக்கம்!
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
டெல்லி: நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் முழக்கமிட்டனர். திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அவையின் மையப்பகுதியிக்கு வந்து கோஷம் எழுப்பினர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில் இன்றைய கூட்டத்திலும் ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதியிக்கு வந்து கோஷம் எழுப்பினர். நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.
இதேபோல் லோக்சபாவிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications