கொல்கத்தாவில் கட்டிடங்களுக்கு மமதாவுக்கு பிடித்த கலரில் பெயிண்ட் அடித்தால் சொத்து வரி விலக்கு
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு பிடித்த வெள்ளை, நீள நிற பெயிண்ட் அடித்தால் சொத்து வரி விலக்கு கிடைக்கும்.
மேற்கு வங்க தலைநகரில் உள்ள மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு பிடித்த வெள்ளை, நீள நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அந்த நிறங்கள் நகரின் அழகை அதிகரிக்கும் என்று மமதா நம்புகிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவின் மேயரான சோவன் சாட்டர்ஜி புதிய திட்டம் ஒன்றை மேயர் கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி அதற்கு ஒப்புதலும் கிடைத்துள்ளது. அந்த திட்டம் என்னவென்றால் கொல்கத்தாவில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மமதாவுக்கு பிடித்த நிறங்களான வெள்ளை மற்றும் ஊதா நிற பெயிண்ட் அடித்தால் 2014-2015ம் ஆண்டுக்கான சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது தான்.
மேயரின் இந்த திட்டம் குறித்து பொருளாதார நிபுணர் அஜித்தவா ராய் சவுத்ரி கூறுகையில்,
என் வீட்டுக்கு என்ன நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட உரிமை. கொல்கத்தா மாநகராட்சி குறிப்பிட்ட நிற பெயிண்ட்களை வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கச் சொல்வது நியாயம் இல்லை. என் வீட்டுக்கு எந்த நிறம் உகந்ததாக இருக்குமோ அந்த நிற பெயிண்ட்டை தான் நான் அடிப்பேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications