ஜார்க்கண்ட் முதல்வர் பதவி வேட்பாளர்: யஷ்வந்தா சின்ஹாவுக்கு அத்வானி ஆதரவு
பாட்னா: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் வேட்பாளராக பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனையை கண்டித்து கடந்த 2ம் தேதி போராட்டம் நடத்தினார். அப்போது அம்மாநில மின்வாரியத் துறை உயர் அதிகாரி தாக்கப்பட்டதையடுத்து யஷ்வந்த் சின்ஹா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் தொகையை செலுத்த மறுத்ததால் யஷ்வந்த் சின்ஹா ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை மூத்த பாஜக தலைவர் அத்வானி, முன்னாள் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா மற்றும் மாநில பாஜக தலைவர் ரவிந்திர சாய் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
அதன் பிறகு அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரவிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை தான் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அவர் தான் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர். பாஜகவினர் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். எனவே சின்ஹா பாஜக தலைவர்களின் உணர்வுகளை மதித்து சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றார்.
அத்வானியின் நம்பிக்கைக்குரியவரான சின்ஹா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஓரங்கட்டப்பட்டார். அத்வானி சின்ஹாவை முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறுகிறார். ஆனால் சின்ஹாவை ஆளுநராக்கப் போவதாக பாஜக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications