ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பரபரப்பு பின்னணி என்ன?
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க 'அரசு வக்கீல்' குறித்த குழப்பமே பின்னணி காரணமாகும்.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பெங்களூரிலுள்ள கர்நாடக ஹைகோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது ராம் ஜெத்மலானி ஜெயலலிதா தரப்பில் ஆஜரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக அரசு வக்கீலாக பணியாற்றிய பவானிசிங், மீண்டும் அரசு தரப்பில் ஆஜராக வந்திருந்தார்.

நீதிபதி ரத்தினகலா கிடுக்கிப்பிடி
ஆனால் நீதிபதி ரத்தினகலாவோ, பவானிசிங்கை, அரசு வக்கீலாக கருதுவதில் குழப்பம் இருப்பதாக அதிரடியாக தெரிவித்துவிட்டார். ஏனெனில் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க மட்டுமே பவானிசிங் அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். அந்த வழக்கு கடந்த சனிக்கிழமையோடு முடிந்துவிட்டது. எனவே பவானிசிங்கின் பதவிக்காலம் அத்தோடு நிறைவடைந்துவிட்டது என்று நீதிபதி தெரிவித்தார்.

அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சிறப்பு நீதிமன்ற வழக்கோடு பவானிசிங்கின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராகும் வக்கீல் யார் என்பதை இன்னும் கர்நாடக அரசு தீர்மானிக்கவில்லை. எனவே அரசு வக்கீல் யார் என்பதை தீர்மானித்து சொல்ல வேண்டும் என்று ஹைகோர்ட் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக அரசு யோசனை
அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6ம்தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ரத்தினகலா. இந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கர்நாடக அரசு, ஹைகோர்ட் தலைமை நீதிபதியுடன் இணைந்து ஆலோசனை நடத்தி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு யாரை அரசு வக்கீலாக நியமிப்பது என்பதை அறிவிக்க வேண்டும்.

யாருமே யோசிக்கலியே
கர்நாடக அரசு நினைத்தால் பவானி சிங்கையே அரசு தரப்பு வக்கீலாக தொடரச் செய்ய முடியும். அல்லது புதிதாக மூத்த வக்கீல் யாரையாவது கூட நியமிக்க முடியும். கர்நாடக அரசின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும். இதில் வினோதம் என்னவென்றால், வழக்கில் ஆஜராக சென்ற பவானிசிங்கும் தனது பதவிக்காலம் முடிந்துவிட்டதால், இனிமேல் இதில் ஆஜராக கூடாது என்ற கோணத்தில் யோசிக்கவில்லை. கர்நாடக அரசு தரப்பிலும், ஜெயலலிதா தரப்பிலும் கூட இதுகுறித்த முன்யோசனை இல்லை என்று கூறப்படுகிறது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஜெத்மலானி
ஆனால் நீதிபதி இந்த பாயிண்ட்டை சரியாக கேட்டு, கோர்ட்டை ஒரு நிமிடம் திக்குமுக்காட செய்துவிட்டார். இப்போதுதான் இரு தரப்புமே அரசு வக்கீல் குறித்த யோசனையை தொடங்கியுள்ளது. இந்த குழப்பத்தால், ஜெயலலிதா சிறையில் இருப்பது சரியில்லை எனவே அவருக்கு ஜாமீன் வேண்டும் என்று ஜெத்மலானி வாதிட்டு பார்த்தார்.ஆனால் நீதிபதி ரத்தினகலாவோ, அப்படி அவசரமாக ஜாமீன் வேண்டும் என்றால், ஹைகோர்ட் தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications