நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என நான் சொன்ன போது கேலி செய்தார்களே, இப்போது என்ன ஆச்சு என பார்த்தீர்களா என கேள்வி எழுப்பினார்.
மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் வரும் 30ம் தேதி ஆட்சியமைக்கிறது. இதில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து வாக்களித்த குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகஞாயிற்றுக்கிழமை மாலை அஹமதாபாத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மாநில அரசு பேரிடர் மேலாண்மை குறித்து தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளை குஜராத் முழுவதும் மேற்கொள்ள வேண்டும.
குஜராத் மக்களின் தரிசனத்தை இங்கு கண்டுகொண்டு இருக்கிறேன். இந்த மக்களின் ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு ஸ்பெசலான ஒன்று. என்னை வளர்த்த இடத்துக்கு வந்துள்ளேன். அதே பழைய மோடியாகவே இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என 6ம் கட்ட தேர்தலின் போது சொன்னேன். ஆனால் அப்போது என்னை மக்கள் கேலி செய்தார்கள். ஆனால் இப்போது என்ன ரிசல்ட் வந்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சராசரி குடிமகனின் பிரச்னையை தீர்க்க இந்த ஐந்து வருடத்தை பயன்படுத்தி கொள்வோம். உலக அரங்கில் இந்தியாவின் நிலையை இன்னும் அதிகரிக்க பாடுபடுவோம். அடுத்த 5 வருட ஆட்சி பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் ஆட்சியாக இருக்கப்போகிறது" இவ்வாறு கூறினார்.
முன்னதாக அமித் ஷா பேசுகையில், குஜராத்தில் பாஜக தொண்டர்கள் முழக்கமிடுவது மேற்கு வங்கம் வரை கேட்க வேண்டும் என்றும் எனவே மேற்குவங்கத்திற்கு கேட்குமாறு தொண்டர்களே முழக்கமிடுங்கள் என்றும் கூறினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக












Click it and Unblock the Notifications