இதோ இன்னும் ஒரு போட்டோ அக்கப்போர்.. 'ரவுடி' பைக்கில் ராகுல்.. படம் காட்டும் பாஜக!
டெல்லி: அறுதப் பழசான ஒரு ராகுல் காந்தி படத்தை எடுத்து வெளியிட்டு இதோ பாருங்கள், பயங்கரமான குற்றவாளி, ஒரு ரவுடியுடன் ராகுல் காந்தி இருப்பதை என்று கூறி போட்டோ சண்டையில் புது ஐட்டத்தை இறக்கி விட்டுள்ளது பாஜக.
தேர்தல் முடியப் போகும் நிலையில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே வாய்ச் சண்டை, வாதச் சண்டை முற்றி தற்போது புகைப்படச் சண்டைக்கு வந்துள்ளனர்.

இரு தரப்பும் மாறி மாறி புகைப்படங்கள வெளியிட்டு வருகின்றன. முதலில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நிலக் குவிப்பு தொடர்பாக வீடியோ படத்தை வெளியிட்டது பாஜக.
இதனால் கோபமடைந்த காங்கிரஸ், மோடிக்கும் ஹவாலா மன்னன் அப்ரோஸ் பட்டாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஒரு படத்தை வெளியிட்டது.
இதற்குப் பதிலடியாக பாஜக தரப்பு ஒரு படத்தை வெளியிட்டது. அதில் காங்கிரஸ் எம்.பி. அஸாருதீன் அதே அப்ரோஸுடன் இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் பாஜக தரப்பிலிருந்து வேறு ஒரு படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். இது ராகுல் காந்தியின் பழைய படம்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி தனது டேப்ளட்டில் வைத்து இந்தப் படத்தை செய்தியாளர்களுக்குக் காட்டினார். அதில் ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருக்கிறார். வண்டியை ஒருவர் ஓட்டுகிறார். அந்த நபரைச் சுட்டிக் காட்டிய மீனாட்சி, இவர் ராஜஸ்தானில் பிரபலமான கிரிமினல். ரவுடி, பல வழக்குகள் இவர் மீது உள்ளன.இவரது பெயர் ஆசிப் பில்லா.
இந்தப் படத்தைப் பார்த்து நாம் ஆசிப் பில்லாவும், ராகுலும் நெருங்கிய நண்பர்கள். ஆசிப் பில்லா செய்யும் அனைத்துக்கும் ராகுல் காந்தியின் ஆசி உண்டு என்று சொல்லலாமா என்று கேட்டார்.
மேலும் அவர் விளக்குகையில், அரசியல்வாதிகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் பலர் போட்டோ எடுத்துக் கொள்வதும், மாலை போடுவதும் சாதாரண விஷயம். எனவே அதை வைத்து அந்தத் தலைவர்களை குற்றம் சாட்ட முடியாது, கூடாது என்றார்.
வர வர வீரப்பன் ரேஞ்சுக்கு போய்க் கொண்டிக்கின்றன அரசியல் கட்சிகள்.. அடுத்து யார் எந்தப் புகைப்படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களோ...
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications