ஜார்கண்ட் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு! இரவில் கைதான ஹேமந்த் சோரன்! பரபரக்கும் ராஞ்சி
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரனை இன்று இரவு அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. இதையடுத்து ஜார்கண்ட்டின் புதிய முதலமைச்சராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருந்தார். இந்நிலையில் தான் நில சுரங்க முறைகேடு குற்றச்சாட்டுகள் ஹேமந்த் சோரனுக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளன.

மேலும் அவரிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறையினர் ஹேமந்த் சோரனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் அதிரடியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் ஜார்கண்ட்டின் புதிய முதல்வர் யார் ? என்ற பெரிய கேள்வி எழுந்தது. மேலும் ஹேமந்த் சோரன் தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட இருப்பதை முன்கூட்டியே அறிந்து இருந்தார். இதையடுத்து ராஞ்சியில் நேற்று அடுத்த முதல்வரை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஹேமந்த் சோரன் கூட்டினார்.
இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த முதல்வர் யார்? என்பது தொடர்பாக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சாம்பை சோரன் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
இதில் அதிகமான எம்எல்ஏக்கள் சாம்பை சோரனின் பெயரை தேர்வு செய்தனர். இது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஹேமந்த் சோரன் கைதான நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஜார்க்கண்ட்டின் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications