முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. ராஜஸ்தானில் வெடிக்க இருக்கும் பஞ்சாயத்து! கையை பிசையும் காங்கிரஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் பேரணி நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதனையடுத்து முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. தற்போது நவம்பர் மாதம் 25ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. அதேபோல முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே இருக்கும் மோதலை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக முயன்று வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த மோதல் போக்கு காங்கிரஸ் தலைமைக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என சொல்லி சொல்லி பார்த்த கட்சி தலைமை, பேச்சை கேட்கவில்லையெனில் சச்சின் பைலட்டை முதல்வராக அறிவித்துவிடுவோம் என்றும் அசோக் கெலாட்டை மிரட்டி பார்த்துவிட்டது. ஆனால், இப்படியெல்லாம் பேசினா மொத்தமாக ராஜினாமா பண்ணிடுவோம் என கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள் வார்ன் செய்ய, கட்சி தலைமையோ என்ன செய்வது என புரியாமல் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து பெரியதாக வெடிக்க, இரு மாதங்களுக்கு முன்னர் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பிரச்னையை அப்போதைக்கு பேசி தீர்த்தது கட்சி தலைமை. அதன் பின்னர் இருவரும் பெரியதாக எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் பைலட் தரப்பு மட்டும், பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே காலத்தில் செய்யப்பட ஊழல்கள் குறித்து விசாரணையை கெலாட் அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை அடிக்கடி வைத்து வருகிறது.
சூழல் இப்படி இருக்கும் நிலையில்தான் இன்று பேரணி நடைபெறுகிறது. பின்னர் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கௌரவ் கோகோய், முதல்வர் அசோக் கெலாட், ராஜ் இன்சார்ஜ் சுக்ஜிந்தர் ரந்தாவா, பிசிசி தலைவர் ஜிஎஸ் தோதாஸ்ரா ஆகியோர் இதில் பங்கேற்றிருந்த நிலையில், இங்கு வைத்தே முதற்கட்ட வேட்பாளர் பட்டியில் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன இருந்தாலும் இன்று பட்டியல் வெளியிடப்படும்போது, சீட் கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் பஞ்சாயத்தை எழுப்புவார்கள். அதாவது, கெலாட் ஆதரவாளர்களுக்கு சீட் கிடைத்திருந்தால், பைலட் ஆதரவாளர்கள் பிரச்னை செய்வார்கள். அதேபோல இவர்களுக்கு கிடைத்திருந்தாலும், அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். எனவே இதை கட்சி தலைமை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications