பிரதமர் மோடியை பாராட்டும் அரவிந்த் கேஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோடியை பாராட்டிப் பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்களை விலை பேசுவதாகவும் புகார்கள் எழுந்தன.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவரை பாஜக மூத்த தலைவர் ஒருவர் ரூ4 கோடிக்கு பேரம் பேசிய சிடி ஒன்றும் வெளியிடப்பட்டது.. இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர்.

குமார் விஸ்வாஸ்
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், அண்மையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விட தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியிருந்தார்.

கேஜ்ரிவால் புகழாரம்
இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:

மக்கள் நம்பிக்கை
மோடி அரசு மீது நாட்டு மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். பண வீக்க விகிதத்தை கட்டுப்படுத்துதல், ஊழலை தடுத்தல், விலை வாசி உயர்வைக் குறைத்தல் ஆகியவற்றை மோடி செய்வார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புகழ்பெற்ற தலைவர்
ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளாகவே இன்னமும் இருக்கிறது. நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களில் மோடியும் ஒருவர். நான் பிரதமராக ஆசைப்படுவதாக எனக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுகிறது.

பிரதமராகும் ஆசை இல்லை
அப்படி ஒரு ஆசை எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில்தான் நான் மோடியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டேன்.

தேர்தல் நடத்தியிருந்தால்..
டெல்லி முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்த உடனேயே சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பெரும்பான்மையுடன் அம்மாநில முதல்வராக 5 ஆண்டுகால ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பேன்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications