கையெடுத்து கும்பிட்ட ‛ஸ்கை’.. மோடி மைதானத்தில் எழுந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம்.. ஷமியை சீண்டிய ரசிகர்கள்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியின் பெயரை கூறி ரசிகர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டது விவாதத்தை கிளப்பி உள்ளது.
அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் போட்டியின்போது சூர்யகுமார் யாதவை பார்த்த ரசிகர்கள் அவரது பெயரை கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் ரசிகர்களை பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டார். இந்த வேளையில் ரசிகர்கள் ‛ஜெய்ஸ்ரீராம்' என தொடர்ந்து கோஷமிட்ட நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் பெயரையும் கூறி சீண்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் 3 போட்டிகள் நடந்துள்ள நிலையில் இந்தியா 2ல் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா பின்தங்கி உள்ளது.

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
இந்நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 2வது நாளான இன்று ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. கவாஜா 180 ரன்களிலும், கேமரூம் கிரீன் 114 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா பொறுமை
இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக ஆடினர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்திருந்தது.
ரோகித் சர்மா 17 ரன்னிலும், சுப்மன் கில் 18 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

விவாதத்தை கிளப்பிய வீடியோ
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த வீடியோ நேற்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் டீ பிரேக்கை முடித்து மீண்டும் மைதானத்துக்குள் வருகின்றனர். அப்போது அனைத்து வீரர்களும் பவுண்டரி கோட்டின் அருகே நின்றனர்.

சூர்யா.. சூர்யா என ஆரவாரம்
இந்த வேளையில் ரசிகர்கள் வீரர்களின் பெயர்களை கூறி ஆரவாரம் செய்தனர். சூர்யகுமார் யாதவை பார்த்த ரசிகர்கள் ‛‛சூர்யா.. சூர்யா..'' என கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து மைதானத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் ரசிகர்களை பார்த்து இருகைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்கி நன்றி தெரிவித்தார்.

ஜெய்ஸ்ரீராம் கோஷம்
இந்த வேளையில் சூர்யகுமார் யாதவ் அருகே அக்சர் படேல், புஜாரா, முகமது ஷமி உள்ளிட்டவர்கள் நின்றனர். இந்த வேளையில் ரசிகர்கள் திடீரென ‛‛ஜெய்ஸ்ரீ ராம்... ஜெய்ஸ்ரீ ராம்... ஜெய்ஸ்ரீ ராம்..'' என தொடர்ந்து முழங்கினர். இந்த வேளையில் ரசிகர் ஒருவர் முகமது ஷமியின் பெயரில் ‛‛ஜெய்ஸ்ரீராம்'' என கோஷமிட்டார். இதனை மைதானத்தில் இருந்த ஷமி கண்டுகொள்ளாமல் சென்றார்.

சீண்டியதாக நெட்டிசன்கள் கோபம்
இருப்பினும் தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. ‛ஜெய்ஸ்ரீராம்' கோஷமிட்டு ரசிகர்கள் முகமது ஷமியை சீண்டியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய செயல் என்பது கூடாது. ரசிகர்கள் மைதானத்தில் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இந்த வீடியோ தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications