3000 கன அடி போதாது என்கிறது தமிழ்நாடு.. அதையும் விட முடியாது என்கிறது கர்நாடகா
டெல்லி: தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரையும் திறந்துவிடும் நிலையில் கர்நாடகா இல்லை என்று கூறி காவிரி மேற்பார்வை குழு உத்தவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த வாரம் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை ஏற்க கர்நாடகா மறுத்துள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 138 பக்க அறிக்கையில், காவிரி மேற்பார்வை குழு உத்தரவுப்படி 3000 கன அடிநீர் போதாது. குழுவின் உத்தரவில் திருப்தி அளிக்கவில்லை. தற்போது குடிநீர் பற்றாக்குறை என கர்நாடகா கூறுவதை ஏற்க முடியாது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி 134 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும். இதுவரை தமிழகத்திற்கு 57.5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் முதல் செப்., வரை 17.5 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா தர வேண்டியுள்ளது. இதனை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனக்கூறியுள்ளது.
காவிரி மேற்பார்வை குழு உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கர்நாடகாவில் 27.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், குடிநீர் தேவைக்கு இதில் 26.33 டிஎம்சி தண்ணீர் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மேற்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்பது கர்நாடகாவின் வாதம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications