ஞானவாபி மசூதியில் அதிகாலையிலேயே பூஜையை தொடங்கிய இந்துக்கள்! உயர்நீதிமன்றத்தை நாடும் இஸ்லாமியர்கள்
வாரணாசி: வாரணாசி நீதிமன்றம் போட்ட உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் இன்று பூஜையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இந்துக்கள் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிம் மற்றும் ஞானவாபி மசூதி அருகருகே உள்ளது. இந்த மசூதியின் சுவரில் உள்ள இந்து கடவுள்களை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மசூதி வளாகத்தில் கோவில் சிவிலிங்கம் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதிக்கு இருக்கும் இடத்தில் மிகப்பெரிய கோவில் இருந்ததற்கான சான்று இருப்பதாகவும், மசூதியில் உள்ள தூண்கள் கோவிலில் பயன்படுத்தப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும் 7 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் பூஜை, வழிபாடுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து இன்று ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கினர். இன்று காலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியும், மதியம் 12 மணிக்கு போக் ஆரத்தியும் நடத்தப்பட்டதாக வழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.
#WATCH | A priest offers prayers at 'Vyas Ji ka Tehkhana' inside Gyanvapi mosque in Varanasi, after District court order.
— ANI (@ANI) February 1, 2024
Visuals confirmed by Vishnu Shankar Jain, the lawyer for the Hindu side in the Gyanvapi case pic.twitter.com/mUB6TMGpET
மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தினமும் ஞானவாபியில் 5 ஆரத்திகள் நடக்கும். காலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தி, மதியம் 12 மணிக்கு போக் ஆரத்தி, மாலை 4 மிணக்கு அப்ரான்ஹா ஆரத்தி, இரவு 7 மணிக்கு சன்கால் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு சயான் ஆரத்தி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தான் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக இஸ்லாமியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஞானவாபியில் பாதுகாப்பு காரணங்களாக துணை ராணுவம், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications