7 வயது சிறுவனை 3 மாதமாக பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்.. டிவி நிகழ்ச்சி மூலம் சிக்கினான்
புனே: வீட்டு உரிமையாளரின் 7 வயது மகனை சுமார் மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 17 வயது சிறுவனை புனே போலீசார் கைது செய்துள்ளனர். டிவி க்ரைம் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புனேயில் பன்கூர்நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்று, கடந்த வெள்ளியன்று டிவியில் க்ரைம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் வீட்டு வேலைக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக கூறப்பட்டிருந்தது.

இதைத் தன் பெற்றோருடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த 7 வயது சிறுவன், ‘இதே போல் தானும் கடந்த 3 மாதங்களாக முன்னாள் வீட்டு வேலைக்காரர் மூலம் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகக் கூறினான்.
மேலும், தினமும் தன்னை குளிக்க வைக்கும் போது வேலைக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், பின்னர் சாக்லேட் கொடுத்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற வேண்டாம் எனக் கூறியதாகவும் தெரிவித்தான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனின் பெற்றோர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நேற்று 17 வயதுடைய அந்த முன்னாள் வேலைக்காரச் சிறுவனைக் கைது செய்த போலீசார், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். எனவே சிறுவனைக் கவனித்துக் கொள்வதற்காகவே மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த அந்த 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். 3 மாதங்கள் மட்டுமே அச்சிறுவன் அங்கு வேலை பார்த்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications