ஆக்ராவில் சர்ச்சுக்குள் புகுந்து மேரி மாதா சிலையை சேதப்படுத்திய விஷமிகள்
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தேவாலயத்தை யாரோ தாக்கி அங்கருந்த அன்னை மேரியின் சிலைகளை சேதப்படுத்தி அதை அவமதித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பிரதாப்பூரா பகுதியில் புனித மேரி தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2 சிலைகளை உடைத்துள்ளனர். அன்னை மேரியின் சிலையை அது இருந்த இடத்தில் இருந்து பெயர்த்துள்ளனர். மேரி மாதா சிலையின் கையில் குழந்தை யேசுவின் தலையை வைத்துள்ளனர். மேலும் மேரி மாதாவின் சிலைகளில் ஒன்றின் கழுத்தில் நாய்ச் சங்கிலியை சுற்றி வைத்துள்ளனர்.

இது குறித்து தேவாலயத்தில் பணிபுரியும் பாதிரியார் மூன் லசாரஸ் கூறுகையில்,
மர்ம நபர்கள் எங்கள் மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். அவர்கள் தேவாலய ஜன்னல்களின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தேவாலய வளாகத்தில் நின்ற காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியபோது அதன் அலாரம் சப்தம் கேட்டு நான் கண்விழித்து ஓடி வந்தேன். அதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டனர் என்றார்.
இந்த சம்பவத்தை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் வியாழக்கிழமை மாலை ஆக்ராவில் கண்டன பேரணி நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications