விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது கடன் கொள்கைக்கே எதிராானது.. ரிசர்வ் வங்கி ஆளுநர் தடாலடி
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் அது கடன் வழங்கும் ஒழுங்கு முறையை பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.
டெல்லி: விவசாயக் கடன் ரத்து என்பது கடன் கொள்கைகளுக்கு எதிரானது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 24-ஆவது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் கருத்து தெரிவிக்கையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் அது கடன் வழங்கும் ஒழுங்கு முறையை பாதிக்கும். மேலும் அத்தகைய கடன் ரத்து என்பது கடன் கொள்கைக்கு எதிரானது.
இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அதாவது நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் 4.5 சதவீதமும், பிற்பாதியில் 5 சதவீதமும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கும். மேலும் நேர்மையான முறையில் கடன் பெறுவதை பாதிக்கும் வகையில்இந்த விவசாயக் கடன் ரத்து இருக்கும். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications