டிச., 30ல் திறப்பு.. அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்! புதுபெயர் இதுதான்! அர்த்தம் தெரியுமா?
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தை வரும் 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராமர் சிலையை கோவில் கருவறைக்கு எடுத்து வர உள்ளார்.

இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாடு பிரதிநிதிகள், சாமியார்கள், மடாதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து மக்கள் தரிசனத்துக்காக ராமர் கோவிலுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் அங்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வந்து செல்வார்கள். இதனால் அயோத்தி ரயில்வே நிலையத்தை புனரமைக்கும் பணி என்பது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் வரும் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதற்கிடையே தான் இன்று அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில்வே சந்திப்பு (Ayodhya Railway Juction) என அந்த ரயில் நிலையத்துக்கு பெயர் இருந்த நிலையில் தற்போது அது அயோத்தி தாம் (Ayodhya Dham)என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அதாவது Ayodhya Dham என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. தற்போது அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அயோத்தி சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயரும் அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications