கள்ளக்காதல்.. சிக்கிய கணவன்.. 'மனைவி மாற்று' முறையில் நண்பனுடன் வாழ சொல்லி டார்ச்சர்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மனைவி மாற்று முறையில் நண்பருடன் வாழுமாறு கணவர் சொன்னதால் அதிர்ச்சி அடைந்த மனைவி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கணவனின் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நவீன வாழ்க்கை முறை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரழிவுகள் அரங்கேறி வருகிறது. விருந்து என்ற பெயரில் குடும்பமே மது அருந்துவது, குழந்தைகள் முன் ஆபாச நடனம் ஆடுவது என கலாச்சார சீர்கேடுகள் அப்பட்டமாக நடக்கிறது.

இந்த சூழலில் குஜராத்தில் ஒருவர் உச்சகட்டமாக மனைவி மாற்று முறையில் நண்பரிடம் வாழுமாறு சொல்லியிருக்கிறார். இந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமணத்தை மீறி உறவு

திருமணத்தை மீறி உறவு

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் எஸ்.ஜி சாலையில் வசிக்கும் 40 வயது பெண்மணி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2004-ம் ஆண்டு திருமணமாகியுள்ளது. திருமணமான 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருப்பதை திவ்யா கண்டுபிடித்துள்ளார்.

மோசமாக நடந்த கணவர்

மோசமாக நடந்த கணவர்

இதுபற்றி தனது கணவரிடம் திவ்யா கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. உண்மை தெரிந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் கணவர் கடுமையாக பேச ஆரம்பித்து இருக்கிறார். உண்மை தெரிந்த நாளில் இருந்து திவ்யாவை அந்த நபர் மோசமாக நடத்த ஆரம்பித்திருக்கிறார்.

மகனை சந்திக்கவிடாமல் கொடுமை

மகனை சந்திக்கவிடாமல் கொடுமை

இதுகுறித்து திவ்யா போலீசார் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து ஆங்கில ஊடகத்திடம் திவ்யா கூறுகையில், "எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருந்தது. இதை தட்டிக்கேட்டதால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டது. 'மனைவி மாற்று' முறையில் தனது நண்பர் ஒருவருடன் இருக்குமாறு எனது கணவர் எனக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கினார். இது ஒருபுறம் எனில் , எனது 11 வயது மகனை பிப்ரவரி மாதமே எனக்குத் தெரியாமல் கூட்டிச் சென்று அவருடைய மாமா வீட்டில் மறைத்து வைத்துவிட்டார். இது தெரிந்தவுடன் நான் எனது மகனைப் பார்க்க கணவருடைய மாமா வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளேன் என்றார்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரி இதுபற்றி கூறுகையில், ‘'குழந்தையை மறைத்து வைத்தது மட்டுமில்லாமல், நீண்ட நாட்களாகவே மாமனார் மற்றும் மாமியாரும் தனது குழந்தைக்கு சமைக்கக்கூட அந்தப் பெண்ணை சமையலறைக்குள் அனுமதிக்காமல் கொடுமை செய்திருக்கிறார்கள். ஜூலை மாதம் அந்த பெண்ணின் அறையிலிருந்து வலுகட்டாயமாக அவரை வெளியேற்றி, வீட்டை விட்டு செல்லுமாறு வற்புறுத்தி இருக்கிறார் . திவ்யாவின் கணவர் மீது இந்திய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 294(பி), 323 மற்றும் 114-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+